புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்
கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த
அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட
சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
நாட்பட்ட என்ற வார்த்தை, உடலில் 6 மாதங்களுக்கும் மேலாக
தொடர்ந்திருக்கின்ற நோயை குறிப்பிடுகிறது. இது பெரும்பாலும், வளர்ந்துகொண்டுள்ள
மற்றும் மீளாத்தன்மையற்ற நோயை குறிப்பிடுகிறது. ஆனால் அதை முன்கூட்டியே
கண்டறியும் பட்சத்தில், அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும் அல்லது அதை
மீளக்கூடியதாக மாற்ற முடியும். எனவே நீண்ட நாட்களுக்கு நீடிக்கின்ற சிறுநீரக
குறைபாடானது, நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) என அழைக்கப்படுகிறது.