முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள‌ மக்கள் >> இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள்

உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)

இரத்த அழுத்தத்தை (BP) வீட்டிலேயே கண்காணித்தல்

நோயாளி தனது இரத்த அழுத்தத்தை வீட்டிலேயே அளவிடும் விஷ‌யத்தில், அது மிகச்சிறந்த இணக்கத்தையும் சாதகமான கட்டுப்பாட்டையும் விளைவிக்கிறது. மருத்துவமனையில் எடுக்கப்படுகின்ற இரத்த அழுத்தமானது உணர்ச்சிவசப்படுவதன் (வொயிட் கோட் ஹைபர்டென்ஷன்) காரணமாக பிழையானதாக உயர்ந்து காணப்படலாம். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், வெவ்வேறு நிலைகளில் நாள் முழுதும் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவதற்காக, 24 மணிநேர நடமாடும் இரத்த அழுத்த கண்காணிப்பை செய்யலாம்.

உப்பு உட்கொள்ளல்

உப்பு உட்கொள்வதே உயர் இரத்த அழுத்தத்திற்கான மிகவும் பொதுவான‌ காரணம். நமது பாரம்பரிய உணவு வகையானது, குறிப்பாக இந்திய உணவு வகையானது, அதிகளவு உப்பைக் கொண்டுள்ளது (ஊறுகாய் போன்றவை). இதற்கான காரணம் என்னவெனில், மக்கள் பண்ணைகளில் வேலை செய்துகொண்டிருந்ததால், அவர்களுக்கு அதிகளவு வியர்த்து அதன்காரணமாய் உப்பு இழப்பு ஏற்பட்டது. உப்பின் உணவுவழி உட்கொள்ளலுடன் இது ஈடு செய்யப்பட்டாலொழிய, ஆற்றல் இழப்பு நிகழும். ஆனாலும் இக்காலத்தில், நமது வீட்டிலும் பணியிடத்திலும் குளிரூட்டல் வசதியுடன் இருப்பதால் நமக்கு வியர்ப்பது என்பது அரிதானதாக இருக்கிறது. நமது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு, உப்பு எடுத்துக்கொள்வதை நாம் குறைப்பது மிகவும் அவசியமானது.

உடல் செயல்பாடு

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதில் உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்று. தசை முறுக்கல் அதிக மாற்றமில்லாத ஆனால் நீளம் மாறுகின்றதான ஐசோடானிக் உடற்பயிற்சிகளின் (ஏரோபிக் பயிற்சிகள், ஃப்ரீ ஹேண்ட் பயிற்சிகள், நடத்தல் போன்றவை) அனைத்து வடிவங்களும், நாளடைவில் இரத்த அழுத்தத்தை 5 முதல் 10 மிமீ வரை குறைக்கும். ஐசோமெட்ரிக் உடற்பயிற்சிகள் (எடை தூக்குதல், ரெசிஸ்டன்ஸ் டிரைனிங் போன்றவை) யாவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

உயிர் பின்னூட்ட பயிற்சிகள் (பயோ பீட்பேக்)

யோகா, தியானம், மியூசிக் தெரபி போன்றவற்றால் நரம்பு மண்டலத்தில் இருந்து வெளியாகும் இயங்கு விசையை குறைப்பதன் வாயிலாக இரத்த அழுத்தத்தை குறைக்கமுடியும்.

உடல் எடை (பிஎம்ஐ, இடை-தொடை சுற்றளவு விகிதம் போன்றவை)

உடல் பருமன், உயர் இரத்த அழுத்தத்துடன் சம்மந்தப்படுகிறது. உடல் எடைக் குறைப்பானது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

மருந்துகள்

அனைத்து மருந்து சிகிச்சைகளுக்குமே, மருத்துவரின் கீழான முறையான மேற்பார்வை தேவைப்படுகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பல்வேறு வகையான மருந்துகள் கிடைக்கப்பெறுகின்றன.

 1. சிறுநீர் இறக்க ஊக்கிகள்/டையூரடிக்ஸ் (தைஸைட் போன்றவை)
  இம்மருந்துகள் யாவும், சிறுநீரகத்தின் வழியாக உப்பை அகற்றி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்கிறது. பொதுவான பக்க விளைவுகளாவன: பலவீனம், குறை பொட்டாசியம்.

 2. கால்சியம் செல்வழி தடுப்பிகள்/கால்சியம் சேனல் ப்லாக்கர் (நிஃபெடிபைன், அம்லொடிபைன் போன்றவை)
  இந்த மருந்துகள் யாவும், இரத்தக் குழாய்களில் கால்சியத்தின் துவாரப் பாதையை தடுத்து, இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்கிறது. பொதுவான பக்க விளைவுகள்: கால்கள் வீங்குதல்

 3. ஆஞ்ஜியோடென்சின் கன்வெர்டிங் என்சைம் (ACE) இன்ஹிபிட்டர் (கேப்டோப்ரில், எனலாப்ரில், லிஸினோப்ரில் போன்றவை)
  சிறுநீரகத்தில், பொதுவாக ரெனின் என அழைக்கப்படுகின்ற ஓர் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.. இந்த ஹார்மோனானது, ஆஞ்ஜியோடென்சினொஜென் என அழைக்கப்படுகின்ற பொருள் மீது செயல்பட்டு, அதை இரத்தக்குழாய் சுருக்கி I & II என உருமாற்றுகிறது. இரத்தக்குழாய் சுருக்கி-II என்பது இரத்தக் குழாய்களின் சக்திமிக்க நுண் குறுக்கி. இந்த ACE தடுப்பான் மருந்துகள் யாவும் இரத்தக்குழாய்ச் சுருக்கி உருமாற்ற நொதி மீது செயல்பட்டு, இரத்தக்குழாய் சுருக்கம் உருவாவதை தடுக்கிறது. பொதுவான பக்க விளைவுகள்: இருமல், உயர் பொட்டாசியம்

 4. ஆஞ்ஜியோடென்சின் - II ப்லாக்கர் (லோசர்டான், வல்சர்டான், இர்பெசார்டன் போன்றவை)
  இந்த மருந்துகள், இரத்தக் குழாய்களில் இரத்தக்குழாய் சுருக்கி-II வின் செயலை தடுக்கிறது. பொதுவான பக்க விளைவுகள்: இருமல், உயர் பொட்டாசியம்

 5. ஆல்ஃபா ப்லாக்கர் (ப்ராஸோசின் போன்றவை)
  ஆல்ஃபா ஏற்பிகள், இரத்தக் குழாய்களில் காணப்படுகின்றன. அவற்றை தூண்டுவித்தலானது, இரத்தக் குழாய்களின் சுருக்கத்தை உருவாக்கி, உயர் இரத்த அழுத்தத்தை விளைவிக்கிறது. இம்மருந்துகள் யாவும் ஆல்ஃபா ஏற்பிகளை தடுத்து, இரத்த அழுத்தக் குறைப்பை விளைவிக்கிறது. பொதுவான பக்க விளைவுகள்: கால்களில் வீக்கம்

 6. பீட்டா ப்லாக்கர் (அடினோலொல், மெடொப்ரொலால் போன்றவை)
  இம்மருந்துகள், பீட்டா ஏற்பிகளை தடுக்கிறது. பீட்டா ஏற்பிகள், பெருமளவு இதயத்தில் காணப்படுகிறது. அவற்றை தடுப்பதானது, இரத்த அழுத்தக் குறைப்பையும் இதயத் துடிப்பு விகிதக் குறைப்பையும் விளைவிக்கிறது.

 7. மையமாய் செயல்படும் (சென்ட்ரலி ஆக்டிங்) மருந்துகள் (க்ளோனிடைன், ரெசெர்பைன் போன்றவை)
  இம்மருந்துகள், நரம்பு மண்டலத்தில் மையமாய் செயல்பட்டு, சில ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கச்செய்து, இரத்த அழுத்தத்தின் குறைப்பை விளைவிக்கிறது. பொதுவான பக்க விளைவுகள்: மனச்சோர்வு.

  இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்தவேண்டாம்.

கூடுதல் தகவல்கள்

இங்கே விளம்பரப்படுத்தவும்..